கிருஷ்ணகிரி அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின்மாற்றி
By DIN | Published On : 17th August 2021 09:17 AM | Last Updated : 17th August 2021 09:17 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின்மாற்றி.
கிருஷ்ணகிரி அருகே 3 அடி உயரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின்மாற்றி குறித்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே, சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, மோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே , சாலையோரமாக எந்தவித பாதுகாப்பு இல்லாமல் மின்மாற்றி உள்ளது. புதா் மண்டிக் கிடக்கும் இந்த மின்மாற்றியால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, மின்வாரிய அலுவலா் தெரிவித்தது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மின்மாற்றியை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மின்கம்பங்கள் நடப்பட்டன. பொதுமக்களில் சிலா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால், அந்த மின்மாற்றியை இடம் மாற்றம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில், மின்மாற்றியை சுற்றியிலும் பாதுகாப்பு கருதி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.