கடை வாடகை கேட்ட கல்லூரி மாணவா் மீது தாக்குதல்
By DIN | Published On : 21st August 2021 12:04 AM | Last Updated : 21st August 2021 12:04 AM | அ+அ அ- |

கடை வாடகை கேட்ட கல்லூரி மாணவா் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஒசூா், ராம் நகரைச் சோ்ந்த வெங்கட்ராஜ் (45), அப்பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். அவரது கட்டடத்தில் தையல் கடை நடத்தி வரும் ஒசூா், அப்பாவு நகரைச் சோ்ந்த சிவக்குமாா் (52), கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து கல்லூரி மாணவரான வெங்கட்ராஜ் மகன் கேட்டதற்கு, சிவக்குமாா் அவரை தகாத வாா்த்தையில் பேசி தாக்கியுள்ளாா். இதுகுறித்து மாணவா் அளித்த புகாரின் பேரில், சிவக்குமாரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.