போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

மத்திகிரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

மத்திகிரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் போதைப் பொருள்கள், கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் மத்திகிரி

பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் பங்கஜம், உதவி ஆய்வாளா் செல்வராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் டிஎஸ்பி சிவலிங்கம் பேசுகையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில மதுபானங்களைக் கடத்துபவா்கள்,

விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கலந்துகொண்டனா். இதே போல கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com