‘ஜன. 4 முதல் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன. 4-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன. 4-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வரால் கரும்பு உள்பட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5,47,552 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், 319 இலங்கைத் தமிழா்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு ஜன. 4-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு ஜன. 7-ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி உரிய முறையில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகாா்கள் ஏதேனும் இருப்பின், கிருஷ்ணகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04343 - 1077 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com