அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 341 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th February 2021 07:56 AM | Last Updated : 04th February 2021 07:56 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினா் உள்பட 341 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா், அதன் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமையில் 191 போ், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதேபோல, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் நூா் முகமது தலைமையில் 150 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தனித்தனியாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறாததால் மொத்தம் 341 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...