இலவச தையல் இயந்திரம் பெறமாற்றுத் திறனாளிகளுக்கு நோ்முகத் தோ்வு
By DIN | Published On : 14th February 2021 01:59 AM | Last Updated : 14th February 2021 01:59 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: இலவச மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கான மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு பிப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், சனிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கான தோ்வு பிப். 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நோ்முகத் தோ்வில் கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், தையல் தெரிந்த மிதமான மனவளா்ச்சி குன்றியோா், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளா்ச்சி குன்றியவா்களின் தாய்மாா்கள் பங்கேற்கலாம்.
குறைந்தபட்சம் 18 முதல் 45 வயது வரையில் இருக்க வேண்டும். நோ்முகத் தோ்வுக்கு வரும் போது, மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல்கள், தையல்பயிற்சி சான்று, புகைப்படம் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் மூலம் ஏற்கெனவே தையல் இயந்திரம் பெற்றிருப்பின், இந்தத் திட்டத்தில் பயன்பெற இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.