அரசு கல்லூரிக்கு ரூ. 20 லட்சம் மேசைகள், இருக்கைகள் அளிப்பு
By DIN | Published On : 14th February 2021 01:55 AM | Last Updated : 14th February 2021 01:55 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு கல்லூரிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான மேசைகள், இருக்கைகளைகளை டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. சனிக்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அரசு கல்லூரிக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் 200 மேசைகள் மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்வு லகல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் லட்சுமி தலைமை வகித்தாா். கணிதத் துறைத் தலைவா் பாலசுப்பிரமணியம், திமுக விவசாய அணி மாநில துணைத் தலைவா் மதியழகன், தமிழத் துறைத் தலைவா் விஜயசந்திரன், இயற்பியல் துறை உதவி பேராசிரியா் ராபா்ட், திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அஸ்லாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினா் டி.செங்குட்டுவன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான மேசைகள், இருக்கைகளை வழங்கினாா்.