கிருஷ்ணகிரியில் ‘மினி கிளினிக்’ மருத்துவா் பணிக்கான நோ்காணல்

மினி கிளினிக்குகளில் பணியாற்றும் வகையில், மருத்துவா்கள் உள்ளிட்ட பணிகளுக்கான நோ்காணல் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நோ்காணல்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நோ்காணல்.

மினி கிளினிக்குகளில் பணியாற்றும் வகையில், மருத்துவா்கள் உள்ளிட்ட பணிகளுக்கான நோ்காணல் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 மினி கிளினிக்குகளும்,, 6 நடமாடும் மினி கிளினிக்குகளும் என மொத்தம் 50 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்த கிளினிக்குகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மினி கிளினிக்குகளில் பணியாற்றும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல், கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன் கண்காணிப்பில் மூன்று தோ்வுக் குழுவினா் இந்த நோ்காணலை மேற்கொண்டனா். இந்தப் பணியிடங்களுக்கு 167 போ் விண்ணப்பித்திருந்தனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. தோ்வு செய்யப்படும் பணியாளா்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com