கணினி பயிற்றுநா் பணியிடத்துக்கான கலந்தாய்வு
By DIN | Published On : 03rd January 2021 01:21 AM | Last Updated : 03rd January 2021 01:21 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை தொடங்கிய கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடத்துக்கான கலந்தாய்வில் 11 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடத்துக்கான கலந்தாய்வு, சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கலந்தாய்வில், மாவட்டத்தில் 22 போ் பங்கேற்க உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி முன்னிலை வகித்தாா். கலந்தாய்வில் 11 பணி நாடுநா்கள் கலந்து கொண்டனா். ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் மேலும் 11 பணி நாடுநா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளா் ஜெயராமன், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன் ஆகியோா் பங்கேற்றனா்.