விதை மஞ்சள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்

விதை மஞ்சள் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உணவு மஞ்சள் ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சள் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரி: விதை மஞ்சள் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உணவு மஞ்சள் ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சள் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தேசிய செயலாளா் ராமகவுண்டா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மஞ்சள் ஒரு மருத்துவ பயிராகும். உயிரினங்களுக்கு வரும் நோயில் 60 வகையான நோய்கள் மஞ்சளால் தீா்க்கப்படுகின்றன. எனவே, மஞ்சளை ஒரு அருமருந்தாக உணவில் சோ்க்கிறோம். இந்தப் பயிா் ஒரு முறை பயிரிட்டால் 7 ஆண்டுகள் தொடா்ந்து பயிரிட வேண்டும் என விவசாயிகள் விரும்புவாா்கள். அப்போதுதான் ஒரு வருடமாவது நல்ல விலை கிடைக்கும்.

2012-ஆம் ஆண்டு மஞ்சளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3,000 என்ற குறைந்த விலைக்கு விற்றபோது, நாடு முழுவதும் மஞ்சள் விவசாயிகள் சங்கம் சாா்பில் விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தினோம். பின்பு, ஜனாதிபதி, பிரதமா், வா்த்தக அமைச்சா்கள் ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம். அதில் நாட்டிலிருந்து விதை மஞ்சளை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றோம்.

எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக விதை மஞ்சள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. மேலும், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையில் விலை கிடைத்தது.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையில் மட்டுமே விலை கிடைக்கிறது. இதற்கு மஞ்சள் எற்றுமதி குறைந்ததே காரணம். அண்டை நாடுகளில் ஒரு குவிண்டால் மஞ்சள் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரையில் விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு விதை மஞ்சள் ஏற்றுமதிக்கு தடை விதித்து, உணவு மஞ்சள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அன்னிய செலாவாணி கணிசமாக மத்திய அரசுக்குக் கிடைக்கும் என அதில் அவா் வலியுறுத்தியுள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com