கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும், பேரணியையும் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தொடங்கி வைத்தாா். பேரணியில் மகளிா் சுய உதவிக்குழுவினா், வாக்காளா்கள் விழிப்புணா்வு குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனா். இந்த பேரணி லண்டன்பேட்டை, வட்டச்சாலை, பெங்களூரு சாலை வழியாக சென்று புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது. வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக புதிய வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளா் அடையாள அட்டை மற்றும் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, வாக்காளா் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், வருவாய் கோட்டாட்சியா் கற்பகவள்ளி, துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், வட்டாட்சியா்கள் வெங்கடேசன், பாரசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பா்கூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வுகளை வட்டாட்சியா் சண்முகம் தொடங்கி வைத்தாா். கோலாட்டம், தெருக்கூத்து கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாக்காளா் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தப்பட்டது.

போச்சம்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி, வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கி, பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com