சிறுமி கடத்தல்
By DIN | Published On : 11th July 2021 02:00 AM | Last Updated : 11th July 2021 02:00 AM | அ+அ அ- |

தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியைக் கடத்திச் சென்ாக இளைஞா் மீது காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூரைச் சோ்ந்தவா் அப்பு என்கிற முகமது (32). தொழிலாளி. இவா் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்திச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் சம்பூா்ணம் வழக்குப் பதிவு செய்து சிறுமியைக் கடத்திச் சென்ற அப்பு என்கிற முகமதுவை தேடி வருகின்றனா்.
போலீஸ் விசாரணையில் அப்புவுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும், மகனும் இருப்பது தெரிய வந்தது. மேலும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...