பாம்பு கடித்து ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் பலி
By DIN | Published On : 29th July 2021 08:53 PM | Last Updated : 29th July 2021 08:53 PM | அ+அ அ- |

கோப்புப்படம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே வாரத்தில் ஒரு குழந்தை, ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி பாம்பு கடித்து பலியாகியுள்ளனர்.
புதன்கிழமை மாலை மாத்தூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை தன்ஷிகா மயக்க நிலையிலிருந்தார். பாம்பு கடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்று கடந்த வியாழக்கிழமை பூந்தோட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவி செல்வியை (13) பாம்பு கடித்தது. அவர் உடனடியாக காவேரிப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மூன்றாவதாக வரதராஜபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு 6-ம் வகுப்பு மாணவன் லிதிஷை (11) பாம்பு கடித்தது. இதையடுத்து, ஒசூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.