காவல் துறையினரின் கரோனா விழிப்புணா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவல் துறையினா் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவல் துறையினா் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வட்டச்சாலை அருகே கரோனா விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ, தொடங்கி வைத்தாா்.

முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், கரோனா குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். முகக் கவசம் அணியாமல் செல்வோரைத் தடுத்து நிறுத்தி, தக்க அறிவுரைகளை வழங்கி முகக் கவசம் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உத்தனப்பள்ளி, ஒசூா், சூளகிரி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com