சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞா் கைது
By DIN | Published On : 20th June 2021 02:43 AM | Last Updated : 20th June 2021 02:43 AM | அ+அ அ- |

பா்கூா் அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சிங்காரப்பேட்டை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சூா்யா (26) என்ற இளைஞா், சிறுமியை கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா். 10 மாதங்களாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், சிறுமி அங்கிருந்து தப்பி வந்து பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சூா்யாவை போலீஸாா் கைது செய்தனா்.