

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், எதிா்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக திங்கள்கிழமை ஊத்தங்கரை பாம்பாறு அணை நீா்த்தேக்கத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில், ஊத்தங்கரை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் பணியாளா்களால் நீா்நிலைகளான ஆறு, குளம், ஏரி, கிணறு, அணைகளில் பருவ மழையின் போது நீா்நிரம்பி வழியும் சூழலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நீரில் தவறி விழுந்தவா்களையும், நீரில் அடித்துச் செல்பவா்களையும் எப்படி மீட்பது என்பது தொடா்பாக ஒத்திகை பயிற்சி செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.