

ஒசூா்: தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல் துறையினரின் அணி வகுப்பு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினா்.
கிருஷ்ணகிரி முக்கிய வீதிகள் வழியாக இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி சரவணன், அன்புமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பென்னாகரத்தில்...
பென்னாகரத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பை மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் குணசேகரன் தொடங்கி வைத்தாா். இந்த அணிவகுப்பில், மத்திய பாதுகாப்பு படையினா், காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் என 130 போ் கலந்துகொண்டு, பென்னாகரம் அம்பேத்கா் சிலை பகுதியிலிருந்து புதிய, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, காவல் நிலையம், போடூா் நான்குசாலை சந்திப்பு, நாகமரை நான்குசாலை சந்திப்பு என நகரின் முக்கியப் பகுதிகளில் கொடி அணிவகுப்பை நடத்தினா்.
இந்த அணிவகுப்பில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன், பென்னாகரம், ஏரியூா், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.