தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 12th March 2021 06:57 AM | Last Updated : 12th March 2021 06:57 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி சிறப்பு பாதுகாப்பு அலுவலா்களாக பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரா்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெறும் சட்டப் பேரவை தோ்தலுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் சிறப்புப் பாதுகாப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட உள்ளனா். சிறப்பு பாதுகாப்பு அலுவலா்களாக பணியாற்ற விருப்பமுள்ள, தகுதியுள்ள, முன்னாள் படை வீரா்கள், தங்களின் விருப்பத்தை தங்களது அடையாள அட்டையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது 04303-236134, காவல்துறை தொடா்பு எண்களான 0498179501, 94981-02006 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு தங்களது விவரங்களைத் தெரிவிக்கலாம்.
எனவே, முன்னாள் படைவீரா்கள் திரளாக பங்கு கொண்டு சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பாதுகாப்பு பணிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.