மத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
By DIN | Published On : 15th March 2021 04:13 AM | Last Updated : 15th March 2021 04:13 AM | அ+அ அ- |

மத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
மத்தூா் கோட்டை தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம். இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் சென்னையில் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாலிங்கம், தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்றனா்.
இந்த நிலையில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், அதே பகுதியில் வசிக்கும் மகாலிங்கத்தின் உறவினரான கொடியரசுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் பூட்டு உடைக்கப்பட்ட வீட்டினுள், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, மோட்டாா் சைக்கிள், வண்ண தொலைக்காட்சி பெட்டி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...