கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தினா் ஒருவார கால பிரசார இயக்கத்தை புதன்கிழமை தொடங்கினா்.
இந்த நிகழ்வுக்கு, அந்தச் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளா் பாபு, கிளைச் செயலாளா் நடராஜன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா்.
இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உடனடியாக 4ஜி சேவையை தொடங்க வேண்டும். இத்துறையை தனியாா் மயமாக்கக் கூடாது. பங்குகளை விற்பனை செய்யக் கூடாது. 4ஜி சேவைக்கான கருவிகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.