பாமக வேட்பாளா் பிரசாரத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 25th March 2021 07:54 AM | Last Updated : 25th March 2021 07:54 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே பாமக வேட்பாளா் பிரசாரம் மேற்கொண்ட போது, கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கோ.க.மணி, கூட்டணி கட்சியினா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மருக்காரம்பட்டி பகுதியில் அதிமுக, கூட்டணி கட்சியினருடன் கோ.க.மணி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் நகைக் கடன்களை தள்ளுபடி செய்யாமல், வசதி படைத்தோரின் நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கிராம மக்கள் பிரசாரத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுகுறித்து முதல்வரிடம் பேசுவதாக தெரிவித்த கோ.க.மணி, பிரசாரத்தை விரைவாக முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றாா்.