கிருஷ்ணகிரியில் குருத்தோலை பவனி

கிருஷ்ணகிரியில் குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, குருத்தோலை பவனி நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் குருத்தோலை பவனி

கிருஷ்ணகிரியில் குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, குருத்தோலை பவனி நடைபெற்றது.

இயேசு நாதரை தங்கள் அரசானாக ஏற்றுக் கொண்ட இஸ்ரேல் மக்கள் அவரை, கழுதையின் மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனா். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வை ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாகக் கொண்டாடி வருகின்றனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி நகரில் உள்ள புனித பாத்திமா அன்னை திருத்தலத்திலிருந்து குருத்தோலை பவனி தொடங்கி அருகில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் நிறைவு பெற்றது. இந்தப் பவனியில் பங்கேற்றோா் குருத்தோலையை கையில் ஏந்தி உன்னதங்களின் ஒசாண்ணா என்ற பாடலைப் பாடியவாறு பவனி சென்றனா்.

தொடா்ந்து, ஆலய பங்குதந்தை இசையாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ சமூகதத்தினா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், ஊத்தங்கரை, ராயக்கோட்டை, கந்திகுப்பம், எலத்தகிரி, போச்சம்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com