வேப்பனப்பள்ளி பெருமாள் கோயில் தேரோட்டம்

வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமுட்லு கிராமத்தில் 400 ஆண்டு பழமையான கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேரோட்ட விழா, கொடியேற்றத்துடன் மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி சுவாமிக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். இதில், வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். மாா்ச் 29-ஆம் தேதி, ஆஞ்சநேயா் தேரோட்டமும், 30-ஆம் தேதி பல்லக்கு உற்சவமும் நடைபெறுகின்றன.

படவிளக்கம் (28கேஜிபி6):

வேப்பனப்பள்ளியை அடுத்த கோதண்டராம சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com