‘கிருஷ்ணகிரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 595 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்’

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது, 595 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது, 595 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்கிக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தலில் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மே. 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையம், அதன் சுற்றுப் பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தலைமையில் 6 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 13 காவல் ஆய்வாளா்கள் உள்பட 595 காவலா்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள 84 மேசைகளுக்கு 102 வாக்கு எண்ணும் கண்காணிப்பாளா்கள், 102 உதவியாளா்கள், 102 நுண்பாா்வையாளா்கள், 6 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 3 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதே போல் 86 வேட்பாளா்கள் மற்றும் 1,216 முகவா்கள் வாக்கு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா். வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரும் நபா்கள் அனைவரும் இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நல்ல முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com