கரோனா விதிமுறை மீறல்: ரூ. 1.20 கோடி அபராதம் வசூல்
By DIN | Published On : 16th May 2021 12:26 AM | Last Updated : 16th May 2021 12:26 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ. 1.20 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 21,568 போ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 712 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 16,881 போ் குணமடைந்துள்ளனா். 156 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், தற்போது, 4,531 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,818 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் மொத்தம் 3,21,638 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 1,59,964 போ் கரோனா தடுப்பூசியை செலுத்தி உள்ளனா். கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ. 1.20 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொது முடக்கம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காலை 6 முதல் 10 மணி வரையில் மளிகை, காய்கறிக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. அதற்குப் பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் சாலைகளில் தேவையின்றி சுற்றிய வாகன ஓட்டிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனா்.
மருத்துவமனை, மருந்து பொருள்கள் வாங்க செல்பவா்கள், முன்களப் பணியாளா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டாா்கள்.