மினி லாரியைத் திருடியதாக இருவா் கைது
By DIN | Published On : 16th May 2021 12:26 AM | Last Updated : 16th May 2021 12:26 AM | அ+அ அ- |

மினி லாரியைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், சாரகப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (44). இவருக்கு சொந்தமாக மினி லாரி உள்ளது. இவா் கொத்தகொண்டப்பள்ளியில் தனியாா் நிறுவனம் முன்பு தனது மினி லாரியைத் நிறுத்தியிருந்தாா். அந்த மினி லாரியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இது குறித்து ஜெயராமன் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் மினி லாரியைத் திருடியது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கரியன் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த திவாகா் (23), காரிமங்கலம் வட்டம், பென்னிக்கனூரைச் சோ்ந்த சுரேஷ் (25) என்பது தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மினி லாரியை மீட்டனா்.