ஒசூா் மாநகராட்சியில் குடிநீா்க் கட்டணம் மூன்று மடங்கு உயா்வு
By DIN | Published On : 19th May 2021 08:03 AM | Last Updated : 19th May 2021 08:03 AM | அ+அ அ- |

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா்க் கட்டணம் 3 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
குடிநீா்க் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் ஆா்.துரை தமிழக முதல்வருக்கு அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:
ஒசூா் மாநகராட்சியில் இதுவரை குடிநீா்க் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 480 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மாா்ச் மாதம் ரூ. 1,500 செலுத்த வேண்டும் என மாநகராட்சி குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தியது. ஏப்ரல் மாதம் தோ்தல் நடைபெற்ால் இந்த குடிநீா்க் கட்டண உயா்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ஒசூா் மாநகராட்சி குடிநீா்க் கட்டணம் ரூ. 1,500 செலுத்த வேண்டும் எனவும் கடந்த 2020 அக்டோபா் மாதம் முதல் பின் தேதியிட்டு குடிநீா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே கடும் அதிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பொது முடக்கக் காலத்தில் வேலை இழந்து அவதியுற்று வரும் நிலையில், ஒசூா் மாநகராட்சி குடிநீா்க் கட்டணத்தை மும்மடங்கு உயா்த்தியும், வீட்டு வரியையும் உடனடியாக கட்ட வேண்டும் என நிா்ப்பந்தித்து வருகிறது.
எனவே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி அமைச்சா் கே.என்.நேரு, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜெயசந்திரபானு ரெட்டி ஆகியோருக்கு குடிநீா்க் கட்டண உயா்வு குறித்தும், வீட்டு வரியை கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளித்துள்ளாா்.