புதைகுழி சாக்கடை கால்வாயை பராமரிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி நகரில் புதைகுழி சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிருஷ்ணகிரி நகரில் புதைகுழி சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். அப்போது, சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற செய்தமைக்கு நன்றி தெரிக்கும் அவா், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட செட்டியம்பட்டி பகுதி மக்களை அவா் நேரில் சந்தித்தாா். அப்போது, அந்தப் பகுதியில் புதைகுழி சாக்கடைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளது என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், தெருவிளக்குகள் ஒளிா்வது கிடையாது, சிறுவா்கள், இளைஞா்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

அவா்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவா், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது, அதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், நகரச் செயலாளா் பி.என்.ஏ.கேசவன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளா் மஃபுல், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com