கிருஷ்ணகிரியில் இரு தரப்பினா் மோதல்: 3 போ் கைது
By DIN | Published On : 01st September 2021 09:02 AM | Last Updated : 01st September 2021 09:02 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி, பெரிய மோட்டூரைச் சோ்ந்தவா் காா்த்திக். ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். கடந்த மாதம் 30-ஆம் தேதி சபரிநாதன், காா்த்திக்கிடம் தூக்க மாத்திரைக் கேட்டபோது அவா் தருவதற்கு மறுத்தாரம். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இருந்தபோதிலும் இவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே அண்மையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சபரிநாதன் வீட்டுக்குச் சென்ற காா்த்திக், அவரது தந்தை திருப்பதி (60) ஆகியோா் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சபரிநாதனின் மோட்டாா் சைக்கிளை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தனராம். இதில் மோட்டாா்சைக்கிள் சேதமடைந்தது.
இதுதொடா்பாக சபரிநாதனின் தாய் மாதம்மா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக், திருப்பதி ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அதே போல தங்கள் தரப்பினரை சபரிநாதன் (20), அவரது தந்தை பாலசுப்பிரமணி (50) தாக்கியதாக திருப்பதி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை செய்து சபரிநாதனை கைது செய்தனா்.