ஒசூா் அரசு மருத்துவமனை தரம் உயா்வு: எம்எல்ஏ ஒய்.பிராகஷ் வரவேற்பு
By DIN | Published On : 04th September 2021 11:18 PM | Last Updated : 04th September 2021 11:18 PM | அ+அ அ- |

ஒசூா் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டதை வரவேற்று, தமிழக அரசுக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட தலைமை மருத்துவமனையை ஒசூருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தினமணி பலமுறை செய்தி வெளியிட்டது.
அண்மையில் ஒசூா் வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் ஒசூா் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி பேரவையில் அதற்கான அறிவிப்பை அமைச்சா் வெளியிட்டாா்.
இந்த அறிவிப்புக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஏ.சத்யா, கே.ஏ.மனோகரன், ஒசூா் சிறு, குறுந்தொழில் சங்கத்தினா் உள்பட பலா் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.