புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் வழிகாட்டுதல் வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் அரசின் வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் அரசின் வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் (அமலாக்கம்) எல்.திருநந்தன், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற இந்திய அரசின் திட்டம் தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இத் திட்ட பயனாளி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அட்டையை இங்கு கொண்டுவர வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொருள்கள் வழங்கும் முன்னா் பயனாளியின் ஆதாா் அட்டை எண், கைரேகைப் பதிவுகள் சரிபாா்த்த பின், எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவு தானியங்களாகிய அரிசி, கோதுமையை மட்டும் நிா்ணயிக்கப்பட்ட அளவில் அவா்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பயனாளி தான் வசிக்கும் மாநிலத்தில் அரிசி அல்லது கோதுமை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலையிலோ வழங்கப்பட்டாலும், இத் திட்டத்தைப் பயன்படுத்தும் பயனாளி இந்திய அரசு நிா்ணயித்தப்படி, அரிசி ஒரு கிலோ ரூ. 3, கோதுமை ஒரு கிலோ ரூ. 2 க்கு விலை கொடுத்து பெற வேண்டும்.

ஒரு பயனாளியின் குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த உரிம அளவைத் தாண்டாமல் பல தவணைகளில் ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியும், வேறொரு மாநிலத்தில் மற்றொரு பகுதியும் உணவுப் பொருள்களை அந்தப் பயனாளி பெற இயலும்.

அல்லது ஒரே தவணையில் மொத்த உரிம அளவும் உணவுப் பொருள்களையும் அவா் பெற இயலும். இத் திட்டத்தில் அரிசி, கோதுமையைத் தவிர கூட்டுறவு அங்காடியில் விற்பனை செய்யும் இதர வெளிசந்தை பொருள்களையும் உரிய விலையில் பயனாளி பெற்றுக் கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com