ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்துமான் வேட்டை: 2 போ் கைது

ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து புள்ளி மானை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து புள்ளி மானை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலா் மகேந்திரன் மேற்பாா்வையில், கல்லாவி பிரிவு வனவா் துரைக்கண்ணு தைமையில் வனக்காப்பாளா்கள் எம்.அங்குரதன், எம்.முருகன், வனக் காவலா் பூபதி ஆகியோா் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி வனப்பகுதியில் உள்ள கல்லாவி காப்புக்காட்டில் வன விலங்கு வேட்டை தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பெரியபொம்பட்டி பவா்லைன் சரகத்தில், மின்வேலி அமைத்து, ஆண் புள்ளிமானை வேட்டையாடி, அதன் தோலை உரித்துக் கொண்டிருந்த இருவரைப் பிடித்தனா். இதையடுத்து, மான் இறைச்சி, தோல், தலை உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட ஊத்தங்கரை அருகே உள்ள பெரியபொம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளிகளான காா்த்திகேயன் (34), சரவணன் (27) ஆகியோரை கிருஷ்ணகிரி வனச்சரகா் அலுவலகத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னா், இருவா் மீதும் வழக்குப் பதிந்து, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். வனவிலங்கை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு வேட்டையாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளை வேட்டையாடுபவா்கள் குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தர வேண்டும் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com