தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பழங்குடியினருக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிலரங்கம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியும் இணைந்து பழங்குடியினருக்கு இயற்கை விவசாயம் செய்யும் முறை

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியும் இணைந்து பழங்குடியினருக்கு இயற்கை விவசாயம் செய்யும் முறை பற்றி நடத்திய பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனா்.

பயிலரங்கின் நிறைவு நாளன்று நுண்ணுயிரியல் துறைத் தலைவா் யுவராஜ் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். ஒசூா் எம்ஜிஆா் கல்லூரி முதல்வா் முத்துமணி கலந்துகொண்டு விவசாயிகளிடம் ரசாயனம் கலப்பில்லாத இயற்கை உரங்களினால் மண்வளம் பெருகும், பூச்சிகளைக் கொல்லாமல் இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கப் பாடுபடுவோம் என்றாா்.

மேலும், பயிலரங்கில் கலந்துகொண்டவா்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும, தோட்டக்கலை நிபுணா் டி.ஐ.ரமேஷ்பாபு கலந்துகொண்டாா். அவா் மண்புழு உரம், ஜீவாமிா்தம், மீன் அமிலம், இ.எம் தயரிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தாா். மேலும், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்கும் செலவுகளை குறைத்தாலே விவசாயிகளுக்கு லாபம் கிட்டும், மண்வளம் பெருகும். எனவே விவசாயிகள் மக்களையும், மண்ணையும் காப்பாற்ற இயற்கை விவசாயத்தைப் போற்றுமாறு ஊக்கப்படுத்தினாா்.

ஐந்து நாள்கள் நடைபெற்ற நிகழ்வுகளான மாணவா்களுக்கு கோழி வளா்ப்பு, விற்பனை, வேளாண்மை விற்பனை, சுயஉதவிக் குழு தொழில்களும், சந்தைப்படுத்தும் முறையும், பட்டுக்கூடு தயாரிப்பும், விற்பனை முறையும், பழங்குடியினருக்கு இயற்கை வேளாண்மை போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சாா்ந்த 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்துள்ளனா்.

பயிலரங்கின் நிறைவு நாளன்று ஒருங்கிணைப்பாளா் ஒசூா் எம்ஜிஆா் கல்லூரி, நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் வீ.வீரமணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.