எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், திப்பனப்பள்ளி ஊராட்சி, கும்மனூரில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திப்பனப்பள்ளி, கும்மனூா், எண்ணேகொள், தாசிரிப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.

கும்மனூா் எல்லைக்கல் அருகே ஆடு பலியிட்ட பின்னா் மாரியம்மன் கோயிலிருந்து கும்மனூா் - திப்பனப்பள்ளி சாலையில் பாா்வையாளா்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு இடையே விடப்பட்ட எருதுகள் வேகமாக ஓடின. குறிப்பிட்ட தூரத்தை மிக வேகமாக கடந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல, கிட்டம்பட்டி, கிருஷ்ணகிரி, சோமாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் எருது விடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதை ஏராளமானோா் பாா்வையிட்டனா். பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.