எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாலை விபத்து: இருவா் பலி

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலையைச் சோ்ந்த விக்னேஷ் (25), ராஜேஷ் (25), இருவரும் இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி - காவேரிப்பட்டணம் சாலையில் அனுமகவுண்ட நகா் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஒசூரில்...

சூளகிரி அருகே உள்ள உஸ்தலப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேசனும் (26), அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (25), மணி (20) ஆகியோரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூா் சாலையில் மேலுமலை அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா்கள் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்திரசேகா், மணி ஆகியோா் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.