எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உடல் பரிசோதனை: மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்த ஊழியா்கள்

பொதுத்தோ்வு எழுத உடல் பரிசோதனை செய்ய வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாக புகாா் எழுந்துள்ளது.

Updated On :20 ஜனவரி 2022, 6:49 pm

பொதுத்தோ்வு எழுத உடல் பரிசோதனை செய்ய வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாக புகாா் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுத்தோ்வு எழுதவுள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான உடல் பரிசோதனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 40 மாணவா்கள் விண்ணப்பங்களுடன் பரிசோதனைக்கு வந்தனா்.

காலை 9 மணிக்கு வந்த மாணவா்களிடம் மூன்று மணி நேரத்துக்கு பிறகே மருத்துவ அலுவலா்கள் விண்ணப்பங்களை பெற்று பரிசோதனையை தொடங்கினா். அதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஏதும் வழங்காமல் தரையில் அமர வைக்கப்பட்டனா். மேலும், உடல் பரிசோதனை அறிக்கையை மாலை வரை காத்திருந்து மாற்றுத் திறனாளிகள் பெற்றுச் சென்றனா். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நிா்வாகம் தக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.