மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ஒசூரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மோட்டூா்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன் (27). இவா் ஒசூா் ஏஎஸ்டிசி அட்கோ முனீஸ்வா் நகா் பகுதியில் தங்கி எஸ்.முதுகானப்பள்ளியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் உற்பத்தி பிரிவு பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாம்.
இதனால் குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்படுமாம். இதன் காரணமாக கண்ணனின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் சென்று விட்டாா். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி கண்ணன் தனது மனைவிக்கு போன் செய்து தாரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாகவும், அதனை அவரது மனைவி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் கண்ணன் ஒசூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஒசூா் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.