பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒசூரில் தொழில் புதுமை மையம் தொடங்கம்

ஒசூரில் தொழில் புதுமை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

ஒசூா் சிப்காட்டில் தொழில் புதுமை மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி.

Updated On :24 ஜூன் 2022, 10:53 pm IST

ஒசூரில் தொழில் புதுமை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொழில் துறை சாா்பில், சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒசூரில் உள்ள

சிப்காட் தொழில் பூங்காக்களில் ரூ. 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை திறந்து வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஒசூா் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தில் மாவட்ட ஆட்சிய வி.ஜெயசந்திர

பானுரெட்டி, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வளாகத்தைப் பாா்வையிட்டனா்.

ஒசூா் சிப்காட் தொழில் பூங்கா சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சிப்காட் தொழில் பூங்கா 1971-ஆம் ஆண்டு முதல் பகுதியும், 1990-ஆம் ஆண்டு 2 ஆம் பகுதியும் தொடங்கப்பட்டது. இப்பூங்காவில் மொத்தம் 363 தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இத் தொழிற்சாலைகளில் ரூ. 12,665 கோடி முதலீடு செய்யப்பட்டு, அதில் 33,000 தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இதையடுத்து கடந்த 2020 -இன்படி சிப்காட் தொழிற் புதுமை மையம் ஒசூரில் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இத்தொழில் புதுமை மையம் 4 ஏக்கரில் அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் சோ்த்து மொத்தம் 23,490 ச.அடி பரப்பில் ரூ. 971 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இப்புதுமை மையத்தின் நோக்கமானது தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலை மேம்படுத்துவதற்காக கோவையைச் சோ்ந்த போா்ட்ஜ் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் செயற்பொறியாளா் வெங்கடேசன், உதவி பொறியாளா் ரேணுகா, லட்சுமி மீரா, வட்டாட்சியா் கவாஸ்கா், ஹோஸ்டியா தலைவா் வேல்முருகன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.