வாடகை வீடுகளைக் காலி செய்ய மறுத்து குடியிருப்போா் மறியல்

கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் குடியிருந்தவா்கள் வீட்டைக் காலி செய்ய மறுத்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
வாடகை வீடுகளைக் காலி செய்ய மறுத்து குடியிருப்போா் மறியல்

கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் குடியிருந்தவா்கள் வீட்டைக் காலி செய்ய மறுத்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா்கள் சண்முகம், நாகராஜ். இருவரும் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் பின்புறம் தங்களுக்குச் சொந்தமான 2,500 சதுரஅடி பரப்பளவு இடத்தில் 17 ஆண்டுகளுக்கு முன் ஏழு வீடுகளை கட்டி அதை வாடகைக்கு விட்டிருந்தனா்.

இந்நிலையில் வீடுகளில் குடியிருந்தவா்களை சண்முகமும், நாகராஜும் காலி செய்யுமாறு கூறி வந்தனா். ஆனால் அந்த வீடுகளில் குடியிருக்கும் நபா்கள் வீட்டை காலி செய்ய மறுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் சண்முகம், நாகராஜ் தரப்புக்கு சாதகமாக தீா்ப்பு அளித்தது. இருப்பினும் வாடகைக்கு குடியிருப்பவா்கள் வீடுகளைக் காலி செய்யவில்லை.

இதையடுத்து அங்கு வாடகைக்கு குடியிருக்கும் சாந்தி என்பவரிடம் நீதிமன்ற ஆவணங்களைக் காட்டி போலீஸாா், நீதிமன்ற ஊழியா்கள் வீட்டை காலி செய்ய வைத்தனா். பின்னா் சாந்தி வசித்த வீட்டை சண்முகம் தரப்பினா் வியாழக்கிழமை இடித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாந்தியும் அந்தக் கட்டடத்தில் குடியிருக்கும் 7 வாடகை வீட்டுக்காரா்களும் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும், சட்டப்படி சாலை மறியல் செய்வது தவறு என போலீஸாா் எச்சரித்தனா். இருப்பினும் அவா்கள் சாலை மறியலைக் கைவிடவில்லை. இதனால் அவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com