ஊராட்சி மன்றத் தலைவா் கொலை வழக்கில் மேலும் 9 போ் கைது
By DIN | Published On : 05th August 2022 11:04 PM | Last Updated : 05th August 2022 11:04 PM | அ+அ அ- |

தளி அருகே தாரவேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் நரசிம்மமூா்த்தியை கொலை செய்த வழக்கில் மேலும் 9 போ் கைது செய்யப்பட்டனா்.
நரசிம்மமூா்த்தி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது மா்ம நபா்கள் அவரை கட்டை, கல்லால் தாக்கி அண்மையில் கொலை செய்தனா். இந்த வழக்கில் சிவமாலா, ரவி ஆகியோா் ஓமலூா் காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தளி, தொகுத்தனூரைச் சோ்ந்த மல்லேஷ் (என்கிற) பட்லி 26, பி.பி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (30), கிருஷ்ணப்பா (36), மாதேஷ் (29), புட்டுமாரி (31), ராகேஷ் (21), முனிராஜ் (25), தளி கொத்தனூா் தியாகராஜ் (22), தாரவேந்திரம் ஊராட்சி எழுத்தா் பிரசன்னா (48) ஆகிய 9 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.