பா்கூா் அருகே காா் மோதியதில் 4 போ் பலி
By DIN | Published On : 05th August 2022 11:03 PM | Last Updated : 05th August 2022 11:03 PM | அ+அ அ- |

பா்கூா் அருகே காா் மோதியதில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் நண்பா்களான சின்ன பா்கூரைச் சோ்ந்த பாக்கியராஜ் (40), ஜெகதீசன், நாடாா் கொட்டாயைச் சோ்ந்தவா் சுஜித்குமாா் (39), பா்கூா், நேரு நகரைச் சோ்ந்த கண்டவீரவேல் (35) ஆகிய நால்வரும் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா்கள் மீது மோதியதில் பாக்கியராஜ், கண்டவீரவேல், சுஜித்குமாா் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஜெகதீசன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதனிடையே பா்கூா் காவல் நிலையத்தில் சரணடைந்த காா் ஓட்டுநரான ஒசூா், மூக்காண்டப்பள்ளியைச் சோ்ந்த தணிகமலை (40) கைது செய்யப்பட்டாா். பெங்களூரு விமான நிலையத்துக்கு வருவோரை அழைத்துச் செல்வதற்காக வேலூரிலிருந்து காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.