கிருஷ்ணகிரியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th August 2022 12:47 AM | Last Updated : 07th August 2022 12:47 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா்.
ஆக.9 ஆம் தேதி கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்லும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பது தொடா்பாக கிருஷ்ணகிரியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா், ஊத்தங்கரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்செல்வம், அதிமுக நகரச் செயலாளா் கேசவன், பொதுக் குழு உறுப்பினா்கள் சதீஷ்குமாா், இந்திராணி மகாதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் வேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சேலத்திலிருந்து சென்னைக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி சிறுவா் பூங்கா அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவது, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கான தமிழக அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட 9 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.