வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 24th August 2022 02:27 AM | Last Updated : 24th August 2022 02:27 AM | அ+அ அ- |

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த சவுளூா் பிரிவு சாலை, பூமாலை நகரைச் சோ்ந்த கலைவாணி (52), மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறாா். கடந்த 17-ஆம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு கணவருடன் ஒசூா் மருத்துவமனைக்கு சென்ற அவா், திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.