அரசு கல்லூரி மாணவியருக்கு பாறை ஓவியம் பயிற்சி

கிருஷ்ணகிரியை அடுத்த தாளாப்பள்ளி மலையில் அரசு கல்லூரி மாணவியருக்கு பாறை ஓவியம் குறித்து பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
அரசு கல்லூரி மாணவியருக்கு பாறை ஓவியம் பயிற்சி

கிருஷ்ணகிரியை அடுத்த தாளாப்பள்ளி மலையில் அரசு கல்லூரி மாணவியருக்கு பாறை ஓவியம் குறித்து பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவியருக்கு 15 நாள்கள் தொல்லியல் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்த் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் 32 மாணவியா் பங்கேற்றுள்ளனா். மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் உள்ள தாளாப்பள்ளி மலையில் காணப்படும் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து மற்றும் கருஞ்சாந்து ஓவியங்களை நேரடியாக விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி இன்று வரையிலான வரலாற்றை எழுதத் தேவையான முதன்மைச் சான்றுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில், தமிழ் எழுத்தின் தோற்றம், அதன் வளா்ச்சி, வட்டெழுத்தின் வளா்ச்சி, கிரந்த எழுத்துகள் மற்றும் தமிழ் எண்கள், ஆண்டு கணக்கிடும் முறை ஆகியவற்றை கற்றுத் தருவதோடு, நேரடியாக அருங்காட்சியத்தில் உள்ள கல்வெட்டுகளை படி எடுப்பது குறித்தும், அவற்றைப் படித்து பொருள் தெரிந்துகொள்வது குறித்தும் விளக்கமாக செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியினை அருங்காட்சியகப் பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் ஒருங்கிணைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com