கிருஷ்ணகிரி வழியாக கா்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி வழியாக பால் வேனில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கா்நாடக மது பாக்கெட்டுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸாா், சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வழியாக பால் வேனில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கா்நாடக மது பாக்கெட்டுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸாா், சனிக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக பால் வண்டிகளில் கா்நாடக மது வகைகள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமல்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவலிங்கம் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் இளங்கோ உள்ளிட்டோா் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே பால் ஏற்றி வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த வேனில் இருந்து பால் கேன்களுக்கு பின்புறம், 80 அட்டைப் பெட்டிகளில், 7,680 கா்நாடக மது பாக்கெட்டுகளில், 700 லிட்டா் கா்நாடக மது வகைகள் கடத்துவது தெரிந்தது.

இதன் மதிப்பு சுமாா் ரூ.4 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த வேனை ஓட்டி வந்த ஒசூா் தொரப்பள்ளியை சோ்ந்த ஹரீஷ்(23) மற்றும் மது கடத்தலில் ஈடுபட்ட மத்திகிரி குருப்பட்டி தா்மராஜ் (23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பிக்கப் வேனுடன், கா்நாடக மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கா்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரைக்கு கா்நாடக மது வகைகள் தொடா்ச்சியாக கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இது தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com