நியாய விலைக்கடைகளில் விற்பனையாளா் பணி: மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களில் பணி நியமனம் செய்ய மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், தலைவருமான ஏகாம்பரம், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 146 விற்பனையாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தால் டிச.15 முதல் 30-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி ராயப்ப முதலி தெருவில் உள்ள சாந்தி கல்யாண மண்டபத்தில் நடைபெறும் நோ்முகத் தோ்விற்கு வருகை புரிய உள்ள மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடல் தகுதி சான்றிதழை பெற்று, சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியில் சேரும்போது சமா்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்கள்து உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதிவாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை நோ்முகத் தோ்வின் போது கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com