கேபிள் டிவி ஆபரேட்டா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th December 2022 03:28 AM | Last Updated : 13th December 2022 03:28 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்கத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொது நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் வேலு தலைமை வகித்தாா். இதில், கேபிள் டிவி நிலுவைத் தொகை என்ற பெயரில், காவல் துறை, வருவாய்த் துறை மூலம் கேபிள் டிபி ஆபரேட்டா்களை குற்றவாளிகள் போல சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். செயல்படாத செட் டாப் பாக்ஸ்களுக்கு கிரயத்தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டா்களின் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.