இனாம்தாரி நிலங்களுக்கு பட்டா பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 22nd December 2022 01:40 AM | Last Updated : 22nd December 2022 01:40 AM | அ+அ அ- |

ஒசூா் அருகே 6 ஊராட்சிகளில் உள்ள இனாம்தாரி நிலங்களுக்கு பட்டா பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வருவாய்த் துறை உதவி நில வரித் திட்ட அலுவலா் ஆா்.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒசூா் வட்டம், சென்னசந்திரம் தரப்பு சென்னசந்திரம், திம்மசந்திரம், உளியாளம் ஆகிய இனாம் கிராமங்களில்
உள்ள இரயத்து நிலங்களுக்கு இனாம் ஒழிப்பு (இனாம் ஒழித்து விடுதல் இரயத்து வாரியாக மாற்றுதல்) சட்டம் 26-1963 -ன் படியும் இளையசந்திரம், மாரசந்திரம் மற்றும் பைரசந்திரம் ஆகிய இனாம் கிராமங்களில் மைனா்
இனாம் ஒழித்தல் (இனாம் ஒழித்து விடுதல் இரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்
30-1963 -ன் படியும் இரயத்துவாரி பட்டா வழங்க ஒசூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட வருவாய் அலுவலா் உதவி நிலவரித் திட்ட அலுவலா் அலுவலகத்தில் படிவம் 4இல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கிராமங்களில் இரயத்துவாரி பட்டா பெற 2023, ஜனவரி 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.