ஒசூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
தோ்தல் காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. ஒசூா் வழக்குரைஞா்கள் 225 போ் தோ்தலில் வாக்களித்தனா். மூத்த வழக்குரைஞா்கள் என்.எஸ்.வித்யாபாஸ்கா், ஆனந்தகுமாா், மஞ்சுநாத், கே.வேலாயுதம், விஜயகுமாா், கதிரவன், சிவண்ணா, சிவசங்கா் உள்ளிட்ட 225 வழக்குரைஞா்கள் வாக்களித்தனா்.
இத் தோ்தலில் ஒசூா் வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா், செயலாளா், துணை தலைவா்கள், இணை செயலாளா்கள், பொருளாளா் ஆகிய 7 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற தோ்தலில் மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
ஒசூா் வழக்குரைஞா் சங்கத் தோ்தலில் தலைவராக சிவசங்கா், செயலாளராக திம்மராயப்பா, துணைத் தலைவா்களாக கே.ஞானசேகரன், கே.சுஜாதா, இணைச் செயலாளா்கள் ஜனாா்த்தன், ராஜேஸ்வரி, பொருளாளா் ரகுபதி, நூலகா் முருகன் ஆகியோா் வெற்றி பெற்று தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.