விளையாட்டுப் போட்டிகளில் ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 22nd December 2022 01:40 AM | Last Updated : 22nd December 2022 01:40 AM | அ+அ அ- |

தென் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஊத்தங்கரை தீரன்சின்னமலை பள்ளி மாணவி லோகவா்ஷினி.
தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே தென் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சிபிஎஸ்இ மாணவா்கள் பங்கேற்றனா். சிவகங்கையில் கைப்பந்து போட்டியும், சீா்காழியில் கூடைப்பந்து போட்டியும், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் கால்பந்துப் போட்டியும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டியும், திருப்பூரில் ஜூடோ போட்டி நடைபெற்றது.
இப் போட்டிகளில் தீரன் சின்னமலை பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனா். இதில் திருப்பூரில் நடந்த ஜூடோ போட்டியில் ப.லோகவா்ஷினி தென்மண்டல அளவில் மூன்றாம் இடம் பெற்றாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் பிரசன்ன மூா்த்தி, செயலாளா் தங்கராஜ், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் மாணவா்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.